திருப்பூர் மீண்டெழத் துணைநிற்போம்!

அமெரிக்க டிரம்ப் அரசின் 50% வரிவிதிப்பால் திருப்பூர் பின்னலாடைத் தொழில்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளும் தீர்வுகளும் என்ற நோக்கில் இன்று நண்பகல் 12 மணியளவில் மக்கள் இயக்கங்கள் அரசியல் இயக்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டறிக்கை சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர். தியாகு , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர்.கனியமுதன் , மக்கள் அதிகாரம் இணைப் பொதுச்செயலாளர் தெய்வீகன் , புஇமு தோழர் மகிழ்நன் , மனித செல்வி , பாஸ்கர் பொதுமையர் பரப்புரை மன்றம் , ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம் பஷீர் , தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சு மாலெ மா பொதுச்செயலாளர் பாலன் , மக்கள் குடியரசு இயக்கம் தம்பி மண்டேலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டறிக்கை ஒருங்கிணைப்பு:
பெரியாரிய அம்பேத்கரிய மக்கள் இயக்கம்
தமிழ்நாடு கூட்டாட்சியல் நடுவம்
புரட்சிகர இளைஞர் முன்னணி

பின்னூட்டமொன்றை இடுக