பகுப்பு: அரசியல்
-
சட்டமன்றத் தேர்தலில் எஸ்.யு.சி.ஐ பங்கேற்பு!

எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் ஆ ரெங்கசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,”17வது சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்றமுறை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக அரசாங்கம் மறுபடியும் ஆட்சியில் தொடர முயற்சிக்கிறது. அதேசமயம், ஏகபோக கார்போரேட் ஆதரவு மதவெறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ஊழலுக்குப் பெயர்போன அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர யத்தனிக்கிறது. மக்களுக்கு இவர்கள் மேலுள்ள வெறுப்பை அறுவடை செய்ய தமிழினவாதம் பேசும் நா.த.க வும் திரை பிம்பத்தை முதலீடாகக்…
-
அறிஞர் அய்ஜாஸ் அஹமது போல ஒருவர் ஏன் தமிழ்நாட்டில் உருவாகவில்லை?

புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹமது 2022 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது சிந்தனைகள் குறித்து தமிழ்ச் சூழலில் எந்தவொரு விவாதமும் எழவில்லை. கோட்பாட்டு ரீதியில் மார்க்சியத்தை விளக்கியதோடு, சமகாலப் பிரச்சனைகளையும் மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆராய்ந்து அவர் பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவந்தார். குறிப்பாக எட்வர்ட் செய்தின் புகழ்பெற்ற ‘ஓரியண்டலிசம்’ நூல் குறித்து அவர் எழுதிய விமர்சனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் பொருத்தப்பட்டை விளக்கி…
-
குமரி திருவள்ளுவர் சிலை : ஆர்.எசு.எசு. கட்டுப்பாட்டிலா?

தமிழ்நாட்டின் தலைநகரில் திருவள்ளுவர் கோட்டமும், தென்குமரி முனையில் வானுயர்ந்த திருவள்ளுவர் படிமமும் அமைந்து பெருமை சேர்க்கின்றன. இப்பணிக்காக வரலாற்றில் கலைஞர் கருணாநிதி இடம் பெறுவார் என்பது திண்ணம். தென்குமரியைத் தன்வயமாக்கத் திட்டமிட்ட ஆர்.எசு.எசு. தம் மூத்த தொண்டர் ஏக்நாத் இரானடேவை அப்பணிக்காக அனுப்பியது. விவேகானந்தர் குமரி முனைப் பாறையில் தவம் இருந்த பின்னரே சிகாகோ மாநாட்டிற்குச் சென்றார் என்ற கட்டுக் கதையோடு தமிழகம் வந்த ஏக்நாத் இரானடே அந்தப் பாறையில் விவேகானந்தருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று…
-
அண்ணாமலையை ராஜ்தாக்கரே எதிர்ப்பது வரவேற்பிற்குரியதே!

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என நாம் சொல்லும்போது ‘மராத்தியம் மராத்தியர்களுக்கே’ என்பது தவறாகுமா? ‘..மும்பை-மராத்தியத்தின் உள்ளாட்சி தேர்தலில், மராத்தியர் அல்லாத வடநாட்டு மாநிலத்தவரை மேயராக நியமனம் செய்வோம்..’ என பாஜக மராத்திய துணைத்தலைவர் சொன்னதை ஆதரித்து, அண்ணாமலை பேசினார். இதை கண்டிக்கும் விதமாக சிவசேனையின் ராஜ்தாக்கரே பெருந்திளாக மராத்திய மக்களைத் திரட்டி கண்டனக்கூட்டம் நடத்தி, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்து, அண்ணாமலையை தமிழர்கள் ஆதரிக்க வேண்டுமென சொல்வது சீமானின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.…