பகுப்பு: சர்வதேசம்
-
நேபாளத்தில் பாசிசமயமாகும் ஜென் ஜி இயக்க ஆட்சி!

நேபாளத்தில் மைய நீரோட்ட கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு மாவோயிஸ்ட் கட்சி மற்றும் ஏனைய மைய நீரோட்டக் கட்சிகளுடைய ஆட்சிகளின் மீதான அதிருப்தியால் விளைந்த ஜென் ஜி(Gen z) எழுச்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த தனது வர்க்க புத்தியை காட்டும் விதமாக கல்வி நிறுவன கட்சிசார் மாணவர் பேரவைகளை மட்டுமன்றி அரசு அலுவலர் இடையேயான கட்சிசார் தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதையும் தடை செய்வதாக ஜென் ஜி இயக்க ஆட்சி அறிவித்துள்ளது. நேபாளத்தில் ஜனநாயகம் தோன்றுவதற்கோ நிலவும் ஜனநாயகத்தையாவது காப்பாற்றுவதற்கு பெரிதும்…
-
அமெரிக்காவின் சதிக்கு துணை போகின்றனவா குர்து அமைப்புகள்?

ஈரானிய குர்திஸ்தானின் அரசியல் படைகளின் கூட்டணி(CPFIK) என்கிற ஒரு இராணுவ கூட்டமைப்பு உருவாகி இருக்கிறது. இது பல்வேறு குர்திஸ்தான் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக உருவாக்கப்பட்டுள்ளது. குர்திஸ்தான் ஜனநாயக கட்சி-ஈரான்(KDPI),குர்திஸ்தான் சுதந்திரக் கட்சி(PAK) குர்திஸ்தான் சுதந்திர வாழ்வுக்கான கட்சி(PJAK), ஈரானிய குர்திஸ்தானின் போராட்ட அமைப்பு உள்ளிட்ட ஆறு அமைப்புகளின் ஒரு கூட்டமைப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஈரானில் கிளர்ச்சியை தொடங்குவதற்காக அமெரிக்க அரசாங்கத்தால் நிதி மற்றும் ஆயுத உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. துருக்கி, சிரியா, ஈரான், ஈராக் என…
-
இருண்ட நிழலை வீசும் எப்ஸ்டீன் ஆவணங்கள்-எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு!

எப்ஸ்டீன் ஆவணங்கள் மோடியின் தலைமைத்துவத்தின் மீதும் இந்தியாவின் இராஜதந்திர நாணயத்தின் மீதும் இருண்ட நிழலை வீசுகின்றன! – SDPI கட்சி குற்றச்சாட்டு! அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் இருந்து வெளிவந்த கவலைக்கிடமான தகவல்கள், மோடியின் தலைமைத்துவத்தின் மீதும் இந்தியாவின் இராஜதந்திர நாணயத்தின் மீதும் இருண்ட நிழலை வீசுகின்றன என எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முஹம்மது அஷ்ரஃப் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்த ஆவணங்களில் உள்ள ஆழமான குற்றச்சாட்டுகள், இந்தியாவின் உயர்ந்த அரசியல்…
-
எப்ஸ்டீன் கோப்புகள் என்றால் என்ன?

“எப்ஸ்டீன் கோப்புகள்” (Epstein Files) என்றால் என்ன என்று பலர் என்னிடம் உள்பெட்டியிலும் வாட்சப்பிலும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள், அவர்களுக்காக இந்த சுருக்கமான பதிவு.. அமெரிக்க நிதி முதலீட்டாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பல்வேறு சட்ட மற்றும் விசாரணை ஆவணங்களின் தொகுப்பு சமீபத்தில் வெளிவானது. இதில் நீதிமன்ற ஆவணங்கள், சாட்சியங்கள், விமானப் பயணப் பதிவுகள், மின்னஞ்சல்கள் மற்றும் பல வழக்கு ஆவணங்கள் அடங்கும். இவை ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட ஒரு அரசு அறிக்கையாக அல்லாது, பல ஆண்டுகளாக நீதிமன்ற…
-
சிரியா: சுற்றுச்சூழலை பாதுகாக்க தனிப் படை!

வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் ஜனநாயக தன்னாட்சி நிர்வாகம் (DAANES) சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு புதிய சிறப்புப் பிரிவை நிறுவியுள்ளது. பிராந்திய சுற்றுச்சூழல் முகமையுடன் நெருங்கிய ஒருங்கிணைப்புடன், உள் பாதுகாப்புப் படைகளால் (அசயிஷ்) இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புப் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இயற்கையை முறையாகப் பாதுகாப்பதும், சுற்றுச்சூழல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் சுற்றுச்சூழல் குழுவின் வருடாந்திரக் கூட்டத்தில் டிசம்பர் 15 அன்று எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இணங்க இந்த புதிய அமைப்பு…
-
அமெரிக்காவினால் தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளுக்கு சீனா உதவாதது ஏன்?

* அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆளான வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி சுமார் 75 விழுக்காடு சீனாவுக்கே செல்கிறது. அத்துடன் சீனா அங்கு எண்ணெய் துறையில் ஏராளமான முதலீட்டை மேற்கொண்டுள்ளது. * சீனா கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் மேற்கொண்டுவரும் BRI(Belt and Road Initiative) திட்டத்தில் வெனிசுவேலா அமைந்துள்ள இலத்தீன் அமெரிக்காவில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. * சீனா முக்கியமாக செல்வாக்கைச் செலுத்தும்(அமெரிக்காவுக்கு போட்டியாக கட்டியுள்ள) ‘பிரிக்ஸ்’ அமைப்பில் வெனிசுவேலா இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது. *…
-
வெனிசுவேலாவும் ஆட்சிக் கவிழ்ப்புகளும்!

வெனிசுவேலாவில் அமெரிக்காவானது 2002ல் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியதால் அப்போதைய வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் தனது ஆட்சியை இழந்தார். சாவேஸின் நலவாழ்வு ஆட்சியினால் பலனடைந்த கீழ்மட்ட வெனிசுவேலாவின் இராணுவ வீரர்களும் வெகு மக்களும் வீதிகளில் இறங்கி இரண்டே நாட்களில் அதை முறியடித்தனர். சாவேஸ் மீண்டும் பதவியில் அமர்ந்தார். அவருடைய ஆட்சியில் துணை ஜனாதிபதியாக இருந்த மதுரோ இப்போது அமெரிக்காவினால் பிடிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ளார். மதுரோவின் ஆசான் சாவேஸுக்கு ஆதரவாக அப்போது களமிறங்கி வெற்றியை சாதித்த சாமானிய வெனிசுவேலா மக்கள்…
-
வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல்! எஸ்.யூ.சி.ஐ கண்டனம்

வெனிசுலா மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு எதிராக ஜன. 6 முதல் ஒரு வாரம் எதிர்ப்பு வாரத்தைக் கடைப்பிடிக்க எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) அறைகூவல் விடுக்கிறது. எஸ்யுசிஐ (கம்யூனிஸ்ட்) பொதுச் செயலாளர் திரு பிரவாஸ் கோஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:“அனைத்து சர்வதேச சட்டங்கள், நடைமுறைகளை அப்பட்டமாகத் தகர்த்தெறிந்து, போர் வெறியர்களான அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வெனிசுலாவை குண்டுவீசி, போதைப்பொருள் கடத்தல் என்ற மோசடி குற்றச்சாட்டில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியுள்ளனர். இச் செயல், ஈராக் மீது படையெடுத்து ஈராக் ஜனாதிபதி சதாம்…