ஆசிரியர்: NewsDesk

  • காவிரிப் பெருநிலம் நூல் வெளியீடு

    காவிரிப் பெருநிலம் நூல் வெளியீடு

    தலைக்காவிரி முதல் பூம்புகார் வரையிலான தனது பயண அனுபவங்களை வழக்குரைஞர் ஆ.விஜய்  நூலாக்கியுள்ளார்.காரா பதிப்பகம் நூலை பதிப்பித்துள்ளனர். 

    இந்நூல் வெளியீட்டு நிகழ்வு ஈரோட்டில் 03.01.2026 அன்று நடைபெற்றது.நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்கள் வெளியிட இலங்கை வடமாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

    வழக்குரைஞர் செயப்பிரகாசம் (புரட்சிகர இளைஞர் முன்னணி) அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.

    மூத்த அரசியல் செயற்பாட்டாளர் கண.குறிஞ்சி  தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
    தமிழ்த்தேச மக்கள் கட்சி நிருவாகிகள் இளையவன் மற்றும் கவியரசன் ஆகியோருக்கு த.வா.க தலைவர் தி.வேல்முருகன் நூல்களை வழங்கினார்.
    த.வா.க தலைவர் வேல்முருகனிடம் தமிழ் மன்றம் அமைப்பாளர் கா.சோலைமலைராஜா நூலின் பிரதியை பெற்றுக்கொண்டார்.

    நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

  • முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு எதிராக அமெரிக்கா?

    முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு எதிராக அமெரிக்கா?

    அமெரிக்க வெளியுறவுத்துறையின் சட்ட மற்றும் இராஜதந்திர குழுக்கள், அந்தத் துறையின் சட்ட ஆலோசகர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து, முஸ்லிம் சகோதரத்துவத்தை உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கக்கூடிய உடனடி முடிவை மதிப்பீடு செய்து வருவதாக கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறுகிறது.

    வாஷிங்டனில் இருந்து கசிந்த தகவல்கள், இந்த அறிவிப்புஹ் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சர்வதேச முஸ்லிம் சகோதரத்துவ வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தனிநபர்கள், வணிகப் பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிதி விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடர வழி வகுக்கும் என்று கூறுகின்றன.

    “அரசியல் இஸ்லாம்” தொடர்பான கட்டமைப்பிற்குள் செயல்படுவதாக நம்பப்படும் தனிநபர்கள், நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை உள்ளடக்கிய விரிவாக்கப்பட்ட பட்டியல்களை அமெரிக்க கருவூலத் துறை தயாரித்து வருவதாக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

    அறிக்கையின்படி, ஒரு அரபு நாடு சமீபத்தில் வாஷிங்டனுக்கு முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் குறித்த விரிவான புலனாய்வு கோப்புகளை வழங்கியது. இந்த ஆவணங்கள் கருவூலம் மற்றும் வெளியுறவுத்துறைகளுக்கு இடையிலான கூட்டு ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டன, அங்கு அவை சட்ட மற்றும் நடைமுறை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    வரவிருக்கும் எந்தவொரு முடிவும், இயக்கத்தின் சிரிய கிளையைத் தவிர, பல அரபு நாடுகளில் செயலில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்கலாம். முஸ்லிம் சகோதரத்துவத்தின் சர்வதேச நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தொண்டு மற்றும் பொருளாதார முன்னணி நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக அமெரிக்க நோக்கத்தை விரிவுபடுத்தக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் முஸ்லிம் சகோதரத்துவக் அமைப்பின் மீது அதிகரித்து வரும் அழுத்தங்களின் பின்னணியில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல அரபு அரசாங்கங்கள் 2011 முதல் முஸ்லிம் சகோதரத்துவத்தை முறையாகத் தடை செய்துள்ளன அல்லது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஐரோப்பாவில், அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்துவதாகக் கருதப்படும் அமைப்புகள் மீது ஒருங்கிணைந்த ஒடுக்குமுறைக்கான அழைப்பு அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக பிரான்சில், கண்காணிப்பு தீவிரமடைந்து வருகிறது.

    அமெரிக்கா பல நாடுகளில் தோற்கடிக்கப்படுவதற்கு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும் ஒரு முதன்மை காரணமாகக் கருதப்படுகிறது.

    (MIDDLE EAST MONITOR இணையதளத்தில் வெளியான செய்தியின் சுருக்கப்பட்ட வடிவம்)

  • ஊடகங்கள் நீதிமன்றங்கள் அல்ல!

    ஊடகங்கள் நீதிமன்றங்கள் அல்ல!

    சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக 3 இஸ்லாமிய மருத்துவர்கள் உள்ளிட்ட நால்வர் தேசிய புலனாய்வு முகமையால்(என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டனர். ஆனால் நேற்று இந்நால்வரும் குண்டுவெடிப்பில் தொடர்பற்றவர்கள் எனக் கூறி என்.ஐ.ஏ இவர்களை விடுவித்தது.

    ஆனால் இவர்களை கைது செய்தவுடனேயே ஊடகங்கள் மீடியா ட்ரெயல் எனுப்படும் ஊடக வழக்கு விசாரணையை தொடங்கிவிட்டன. கைதானவர்களை மையப்படுத்தியும் அல்-ஃபலாஹ் கல்வி நிலையத்தைக் குறிவைத்தும் செய்தி ஊடகங்கள் பல்வேறு கட்டுக்கதைகளையும், புனைவுகளையும் கட்டமைக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் இந்த நால்வரும் விடுதலை செய்யப்பட்டது குறித்தோ இவர்களுக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எந்த ஊடகங்களும் வாய்திறக்கவில்லை. ஏனெனில் அனைத்து ஊடகங்களும் அவ்வளவு புனைவுகளை இவர்கள் மீது கட்டமைத்து வைத்துள்ளன.

    வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே என இவர்கள் கூறுவது தான் ஒரு கூட்டத்தை இன்றும் அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது.

  • தமிழ்க் குடியரசை உருவாக்குக – சுயாட்சி இயக்கம் தீர்மானம்!

    தமிழ்க் குடியரசை உருவாக்குக – சுயாட்சி இயக்கம் தீர்மானம்!

    கடந்த ஞாயிற்றுக் கிழமை(16.11.2025) அன்று பொள்ளாச்சியில் சுயாட்சித் தமிழ்நாடும் மக்கள் அதிகாரமும் என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

    தோழர் தமிழ்த்தேசம் தாவீது, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கார்த்தி, நீதிக்கான கூட்டியக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் தோழர் மாரிமுத்து ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    இக்கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.